2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 2,000 மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவிப்பு!

Saturday, March 26th, 2022

சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 2,000 மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இறப்பர் மற்றும் அரிசி உடன்படிக்கையின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவசர உணவு உதவியாக இந்த அரிசி வழங்கப்படவுள்ளதாக சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக சீன அரசாங்கத்திடம் இருந்து 2.5 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு இலங்கை முன்னர் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: