ஜப்பானில் விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கான தகுதித் தேர்வுகளை நடத்த முடிவு – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Wednesday, September 22nd, 2021

இலங்கை அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கான தகுதித் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தாதியர், பராமரிப்பு பணியாளர் மற்றும் உணவு சேவை தொழில் ஆகிய துறைகளுக்காக இந்த தகுதித் தேர்வுகள் நடாத்தப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தேர்வு நடத்தப்படும் மற்றும் கணினி அடிப்படையிலான தேர்வு பலதரப்பட்ட வினாத்தாள் மூலம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை கட்டணம் பற்றிய தகவல்கள் www.slbfe.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சை ஜப்பான் மொழியில் இடம்பெறும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களுக்கான அழைப்பு மற்றும் தேர்வு மையங்களின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அந்த பணியகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: