அபாய கட்டத்தில் நாடு – முகங்கொடுப்பதற்கு தயாராகுமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தகவல்!

Saturday, April 24th, 2021

நாடு தற்போது அபாய நிலையிலுள்ளது. எனவே அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் தொடர்பான நேற்றைய விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் பேசிய அவர்,

நாடு தற்போது அபாய நிலையிலுள்ளது. எனவே அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அதற்கான சகல வேலைத்திட்டங்களும் அரசாங்கம் , சுகாதார அமைச்சு ஏனைய சுகாதார தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் எத்தகைய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும்.

ஜேர்மன் , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கூட தற்போது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. எமது அயல் நாடாள இந்தியாவிலும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் காணப்பட்டதை விட தற்போது உருமாறிய வைரஸ் பரவலே இதற்கான காரணமாகும். இது எமக்கு ஏற்பட்டுள்ள சவாலாகும்.

எனவே இந்தச் சவாலுக்கு முகங்கொடுப்பதற்கு ஒவ்வொரு பிரஜைகளும் தமது கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும்.

எனவே இம்முறை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அல்லது போக்குவரத்து கட்டுப்பாடு என்பவற்றை விதித்து சட்டத்தின் மூலமாக அன்றி , முழுமையாக மக்களின் ஒத்துழைப்புடன் நிலைமையை கட்டுப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தககது.

Related posts: