புகையிரதத் திணைக்களத்தினால் Park & Ride சேவை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் அறிமுகம் !
Sunday, June 2nd, 2024
இலங்கை புகையிரத திணைக்களத்தினால் முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Park & Ride சேவை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் பாதுக்கை புகையிரத நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தமது அன்றாட பணிகளுக்காக புகையிரத போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் தமது வாகனங்களை பாதுகாப்பான முறையில் புகையிரத நிலைய வளாகத்தில் நிறுத்தி விட்டு புகையிரத பயணத்தை மேற்கொள்ளும் வகையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி Park & Ride சேவை வாகன தரிப்பிடத்தில் சிறிய கட்டணம் அறவிடப்படுவதுடன் தமது வாகனங்களை எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பான முறையில் வைத்து விட்டு புகையிரத பயணத்தை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஊசி மருந்து உற்பத்தி தொழிற்சாலையை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தியோகபூர்...
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்!
இஸ்ரேலில் உள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் இலங்கை தூதரகம் அவதானத்துடன் உள்ளது - தொழில் மற்றும் வெள...
|
|
|


