தனியார் மருத்துவக் கல்லூரியை அகற்ற அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஜோசப் ஸ்ராலின்

Tuesday, May 2nd, 2017

கல்வியைத் தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அரசாங்கம் சைற்றம் எனும் தனியார் மருத்துவக் கல்லூரியை அறிமுகப்படுத்தி அரசாங்கம் அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

அதற்கெதிரான போராட்டத்திற்கு நாங்களனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரியை அகற்ற வேண்டும் என நாங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

ஆறு அமைப்புக்கள் ஒன்றிணைந்து கூட்டு மேதினப்ப பேரணி நிகழ்வை இன்று திங்கட்கிழமை(01) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்-08 ஆம் திகதி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் அதே ஆண்டு ஜனவரி மாதம்-27 ஆம் திகதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பாடசாலைகளின் செலவுகள் அனைத்தையும் மாணவர்களிடம் அறவிடும் முறையை அமுலுக்குக் கொண்டு வந்தது.

இலங்கையில் 24 ஆசிரியர் கலாசாலைகள்  காணப்படுகின்றன. ஆன போதும் தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் ஆசியர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் நிலைக்கு அரசாங்கம் சென்றுள்ளது.  கல்வியை மாத்திரம் அரசாங்கம் தனியார் மயப்படுத்தவில்லை. பல விடயங்களை அரசாங்கம் தனியார் மயப்படுத்துவதில் நாட்டம்  கொண்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கெதிராக இலங்கையில் மாத்திரமல்லாமல் சர்வதேச ரீதியான அழுத்தமும் எமக்கு அவசியம் என்றார்.

Related posts: