கலால் வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள உயர்மட்டக் குழு நியமனம் – ஊடகப்பேச்சாளர் கபில குமாரசிங்க!

Saturday, April 24th, 2021

கலால் வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக கலால் வரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால், 12 சட்டத்தரணிகள் உள்ளடங்கிய உயர்மட்டக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

குழுவில் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

குழுவினரின் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், அதன் அறிக்கையை வருடத்தின் முதல் 6 மாதங்களுக்குள் எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய வர்த்தக நிலை, உலகப் பொருளாதாரம், சமூகத்தினரின் நிலைபாடு மற்றும் பல்வேறு தரப்பினரின் தேவைகள் உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு, தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப கலால் வரி திணைக்களத்தின் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கபில குமாரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: