ஜனாதிபதி தாய்லாந்து விஜயம்!

Friday, October 7th, 2016

ஆசிய பிராந்திய வலய ஒத்துழைப்பினை மேம்படுத்தும் மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இன்று முற்பகல் தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டுச் செல்வார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஆசியாவின் முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாகவும் 34 ஆசிய நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான், ஈரான் உள்ளிட்ட 34 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.ஆசிய ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2002ம் ஆண்டு நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இம்முறை இந்த மாநாடு எதிர்வரும் 9 மற்றும் 10ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.ஆசிய பிராந்தியத்தில் வறுமை ஒழிப்பு, மக்களின் அறிவாற்றலை அதிகரித்தல், மக்களை வலுவூட்டல், ஆசிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் போன்ற காரணிகள் குறித்து இம்முறை மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாய்லாந்து பிரதமருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை ஒன்றையும் நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2038 copy

Related posts: