கையடக்கத் தொலைபேசி மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவிப்பு!

Monday, April 22nd, 2024

கையடக்கத் தொலைபேசி மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம்முதல் இந்த சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும், போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளில் கட்டணத்தை காட்டும் மீற்றர் பொருத்தப்பட வேண்டும் எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மட்டும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகள் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் கட்டணங்களை வசூலித்தால் அது தொடர்பான முறைப்பாடுகளை 0112860860 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

காலஞ்சென்ற அமரர் இந்திராணி பாக்கியநாதனின் குடும்பத்தினருக்கு டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆறுதல்!
நடைமுறையில் உள்ள ஊரடங்கச் சட்டம் கடுமையாக முன்னெடுக்கப்படுன்றது – மீறுவோர் கைதுசெய்யப்படுகின்றனர் - ...
பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை - புவியியல் தகவல் அமைப்புகளில் வீதிக் கட்டமைப்பை ...