நடைமுறையில் உள்ள ஊரடங்கச் சட்டம் கடுமையாக முன்னெடுக்கப்படுன்றது – மீறுவோர் கைதுசெய்யப்படுகின்றனர் – பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Sunday, May 17th, 2020

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இன்றையதினத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள தெரிவித்துள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்றையதினம் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக செயற்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக செயற்படுவது அவசியம் என்பதனால் அதற்கு கீழ்படியாதவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்னிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 5 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

அத்துடன் நாளை அதிகாலை 5 மணிக்கு  கொழும்பு – கம்பஹா மாவட்டத்தை தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கு இந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளதுடன் மீண்டும் எதிர்வரும் சனிக்கிழமை அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் மீள் அறிவிப்பு வரை தொடரும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: