மக்கள் முறைப்பாட்டு பிரிவை வலுவாக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை!

Sunday, September 18th, 2016

ஒழுக்கத்தை மீறி செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது, பொலிஸ் தாபன விதிக் கோவையின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையை பொலிஸ்மா அதிபர் ஊடாக முன்னெடுக்கப்படும் என ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே குறிப்பிட்டார்.

இத்தகைய நடவடிக்கையின் ஊடாக பொது மக்கள் முறைப்பாட்டுப் பிரிவு மேலும் வலுப்பெறும் என்றும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரை பொலிஸ் மக்கள் முறைப்பாட்டுப் பிரிவிற்கு மேலதிக பணிப்பாளராக நியமிப்பதற்கு எண்ணியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக இந்த பிரிவின் மூலம் பொலிஸாருக்கு எதிராக கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

0002

Related posts: