ஜனாதிபதியின் ரணில் வெளிநாட்டு பயணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவுகள் தொடர்பான விடயம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கம்!

Monday, April 22nd, 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பயணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவுகள் தொடர்பான விடயம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை ஜனாதிபதி பங்கேற்ற வெளிநாட்டுப் பயணங்கள், ஒவ்வொரு பயணத்தின் போதும் சந்தித்த வெளிநாட்டுத் தலைவர்கள் குறித்தும், அவர்களுடன் இராஜதந்திர ரீதியில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அந்த உடன்படிக்கைகளை எட்டுவது தொடர்பிலும் கேட்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்திலும் ஜனாதிபதியுடன் பங்குபற்றிய தூதுக்குழுவினர்களுக்கு  செலவிடப்பட்ட தொகை குறித்தும் விளக்கமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் ஜயந்த சமரவீர, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இக்கேள்விகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை அலுவலகத்திற்கு ...
கல்வி - சுகாதாரத்திற்காக அதிகளவிலான நிதியை ஒதுக்க திட்டம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!
உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலங்களில் உள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல - உச்ச நீதி...