60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பு!

Monday, September 12th, 2022

அரச உத்தியோகத்தர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய குறிப்பாணையை கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று திங்கட்கிழமை அல்லது எதிர்வரும் வாரம் இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் அண்மையில் நரடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் 65 வயதாக இருந்த அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள் தவிர 60 வயதை எட்டிய அரசு ஊழியர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு பெற வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

இது தொடர்பான சுற்றறிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

000

Related posts: