இவ்வருடத்தின் இதுவரையான நாட்களில் டெங்குநோயின் தாக்கத்திற்கு இலக்காகி 200 பேர் உயிரிழந்துள்ளனர். 69 ஆயிரத்து 380 பேர் பாதிப்பு.

Monday, June 26th, 2017

இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரையானநாட்களில் டெங்குநோயின் தாக்கத்திற்கு இலக்காகி 200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 69 ஆயிரத்து 380 பேர் டெங்குநோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதாரஅமைச்சின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இவ்வாறுஉயிரிழந்தவர்களில் குழந்தைகளும்,சிறுவர்களுமேஅதிகளவில் காணப்படுவதாகவும் குறிப்பாகபாடசாலைமாணவர்களிடையே 20 வீதத்தால் டெங்குநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவியசீரற்றகாலநிலைகாரணமாகடெங்குநோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாகவும், இந்நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனாதிபதிசெயலணிஉள்ளிட்டசெயலணிகள் திட்டங்களைவகுத்துசெயற்படுத்திவரும் அதேவேளை,சர்வதேசஉதவிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.

நாட்டில் டெங்குநோயின் தாக்கம் மேல் மாகாணத்திலேயேஅதிகளவில் காணப்படுவதாகவும்,கொழும்புமாவட்டத்தின் 15 வலயங்களில் 14 வலயங்களைடெங்குவலயங்களாகபிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

Related posts: