கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டில் உள்நாட்டுக் கடனில் எந்தவிதமான குறைப்பும் இருக்காது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, June 21st, 2023

முன்மொழியப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டில் உள்நாட்டுக் கடனில் எந்தவிதமான குறைப்பும் இருக்காது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு காரணமாக ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதிப் பயனாளிகள் அல்லது ஓய்வூதிய நிதிகளுக்கு எந்த அநீதியும் ஏற்படாது என்றும் அரசாங்கம் உறுதியளிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்..

மேலும் உத்தேசித்துள்ளபடி உள்நாட்டுக் கடனை மறுசீரமைத்தால் நாடு பாரிய பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் உள்நாட்டுக் கடனைக் குறைக்க அரசாங்கம் உடன்பட்டிருந்தால், இந்த விடயத்தை மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: