ஜனாதிபதித் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!
Tuesday, August 13th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி நேற்றைய தினம் 5 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
வேட்பு மனுக் கோரல் எதிர்வரும் 15 ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை இடம்பெறவுள்ளது. அன்றையதினம் இராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அடங்கலாக 1,500 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படாது - ரயில்வே பொது முகாமையாளர்!
இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு – உலகளவில் 6 இலட்சம் நோயாளர்கள் பூரண குணமட...
பல்வேறு மோசடி சம்பவங்கள் - மாதாந்தம் 100 பேருந்து நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக இலங...
|
|
|


