இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு – உலகளவில் 6 இலட்சம் நோயாளர்கள் பூரண குணமடைவு!

Sunday, April 19th, 2020

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 13 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது.

இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 15 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைவரும் கொழும்பில் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 91 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 158 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலினால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6 இலட்சத்தை தாண்டியுள்ளதாக செய’;திகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் வுஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி மனித உயிர்கயுளுக்கும் நாடுகளின் பொருளாதாரங்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, 6 இலட்சத்து 703 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மேலும், இரண்டு இலட்சத்து 34 ஆயிரத்து, 539 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 இலட்சத்து 29 ஆயிரத்து 806ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து  896 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்து 38ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன.

Related posts: