வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Saturday, October 7th, 2023

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த செப்டெம்பர் மாதம் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பப்பட்ட பணம் 482.4 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொகையானது கடந்த வருடம் 359.3 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டுள்ளது.

இருப்பினும், தொடர்ந்து மூன்றாவது மாதமாக உத்தியோகபூர்வ பணப்பரிமாற்றம் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக 541 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒகஸ்ட் மாதம் 499.2 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த செப்டெம்பர் மாத நாணயக் கொள்கையின் அடிப்படையில் இலங்கையின் உத்தியோகபூர்வ பணப்பரிமாற்றம் 34 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:

உர தட்டுப்பாடு நீக்கப்படும் - நாடாளுமன்றத்தில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!
கடனுதவிக்காக இந்தியா நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை – மூன்று வருட தவணை முறையில் திருப்பி செலுத்த...
செலுத்தப்பட்டது எரிபொருள் கப்பலுக்கான கட்டணம் - பெட்ரோல் தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும் என அ...