ஜனவரி 9 முதல் 11 வரை புதிய அரசியல் அமைப்பு குறித்து விவாதம்!
Tuesday, December 13th, 2016
எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையில் புதிய அரசியல் சாசனம் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது இன்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், முதல் தடவையாக இலங்கையில் அரசியல் அமைப்பு குறித்த விடயங்கள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன.
கடந்த காலங்களில் அரசியல் அமைப்பு பற்றிய விடயங்கள் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. தற்போது நாம் என்ன செய்கின்றோம் என்பதனை மக்கள் அறிந்து கொள்ள வழியுண்டு. நாடாளுமன்றில் விவாதம் நடத்தி ஒவ்வொரு தரப்பின் கருத்துக்களையும் உள்வாங்கி அரசியல் அமைப்பினை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியல் அமைப்பு அமைப்பது தொடர்பில் ஆறு உபகுழுக்கள் நியமிக்கப்பட்டு பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும், அவை குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்படும் எனவும் அமைச்சர் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


