இடைநிலை தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரம் தேசிய பாடசாலை அதிபருக்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!

Friday, May 15th, 2020

தேசிய பாடசாலைகளின் இடைநிலை தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரம் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அடுத்த வருடம்முதல் இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ள அவதானம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

தேசிய பாடசாலைகளில் 1,5 மற்றும் 6ஆம் தர மாணவர்களை தவிர்த்து ஏனைய வகுப்புகளில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரம் தற்போது கல்வி அமைச்சின் செயலாளரிடமே உள்ளது.

பல்வேறு முறையின் கீழ் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரத்தை அதிபரிடம் வழங்குவதற்கும், அது தொடர்பிலான வேலைத்திட்டங்களை எதிர்வரும் காலங்களில் தேசிய பாடசாலைகளின் அதிபர்களிடம் சுற்றறிக்கைகள் மூலம் அறிவிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சிற்கு பொது மக்கள் நாட்களில் அதிகமாக இடைநிலை தரத்தில் மாணவர்களை சேர்ப்பதற்காகவே பெற்றோர் வருகின்றனர்.

சில நாட்களில் 2000 பேர் வரையில் தங்கள் அமைச்சிற்கு வருபவதாகவும், பாரிய அளவிலானர்வகள் தங்கள் அவசியத்தை நிறைவேற்றிக் கொள்ளாமல் திரும்பி செல்ல நேரிடுவதாகவும் கல்வி அமைச்சின் செயலாள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமைகளை கருத்திற் கொண்டு அதற்கான அதிகாரத்தை தேசிய பாடசாலைகளின் அதிபர்களிடம் ஒப்படைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: