போர் அச்சத்தில் இருந்து விடுபட்ட வடக்கை போதைப் பொருள் பயன்பாடு பற்றியுள்ளது – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

Saturday, September 10th, 2016

போதைப் பொருள் பாவனைக்கு எதிராக உறுதியான பொதுக் கருத்து ஒன்றை சமூகமயமாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனைத்து மனித சமுதாயத்தையும் அழித்து நாட்டு மக்களை வறுமை நிலைக்கு உள்ளாக்கும் போதைப் பொருள் பாவனையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

யாழ். மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெறுகின்ற “போதையற்ற நாடு” என்ற போதைபொருள் ஒழிப்பு திட்டத்தின் 08வது கட்டத்தின் பிரதான வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.

போதையற்ற நாடொன்றை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் கொண்டு செல்லும் வேலைத்திட்டத்துடன் ஒன்றிணைந்து நாட்டிற்காகவும் தேசியத்திற்காகவும் உள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.  போர் அச்சத்தில் இருந்து விடுபட்ட வடக்கில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய சமூக அச்சுறுத்தல் போதைப் பொருள் பயன்பாடு என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்.

President2

Related posts: