ஜனநாயகத்தை பாதுகாத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச உயர்ந்த இடத்தில் இருப்பார் – நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டு!
Friday, August 5th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எங்கள் மொட்டு கட்சியில் இருந்து கொண்டுவந்த ஜனாதிபதி. அதேநேரம் தற்போதைய பிரச்சினைகளை எதிர்கொள்ள அவருக்கு சில இயலாமைகள் இருந்தன. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருந்தால் அவர் இன்னும் ஜனாதிபதியாக இருந்திருப்பார். இது கோட்டாபய ராஜபக்ச “பெயில்” கதையல்ல, இந்த சமூக பிரச்சினைகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை என்றே கூறுகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆனால், ஜனநாயகத்தை பாதுகாத்த ஜனாதிபதியாக உலக வரலாற்றில், மிக உயர்ந்த இடத்தில் அவர் இடம் பெறுவார் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், போராட்டக்காரர்கள் தனது தனிப்பட்ட வீட்டிற்குச் சென்றபோது கூட அவர், எந்த முடிவும் எடுக்கவில்லை. அவருடைய அரச வாசஸ்தலத்திற்கு வந்து அடித்த போது கூட எதுவும் செய்யாமல், இலங்கையை விட்டு வெளியேறினார்.
எனவே அவருக்கு ஜனநாயகம் மிகவும் அதிகமாக உள்ளது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|
|


