தவறிழைத்த மாணவர் தொடர்பில் மாணவர்களுக்கு விடுகைப்பத்திரம் வழங்குவது வரம்பு மீறலாகும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டு!

Thursday, March 30th, 2023

தவறிழைத்த மாணவர் தொடர்பில் பாடசாலை ஒழுக்காற்றுக் குழுவினைக் கூட்டி பாடசாலையிலிருந்து இடைவிலகாத வகையில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமே தவிர மாணவர்களுக்கு விடுகைப்பத்திரம் வழங்குவது வரம்பு மீறலென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு உரிய நடவடிக்கைகளை பின்பற்றாமல் அதிபர்கள் எதேச்சையாக பாடசாலை விடுகைப்பத்திரங்களை வழங்குவது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் கிடைக்கப்பெறுகின்ற முறைப்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்துக்குட்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன்  கடந்த 22.03.2023 அன்று பி.ப. 2.00 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில்  கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர் திரு. தங்கவேல் கனகராஜ் தலைமையில் இடம்பெற்ற  இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டதிலுள்ள வலயக்கல்வி அலுவலகஙள்;, சட்ட வைத்திய நிபுனர், சிறுவர் நன்னடத்தை மற்றும ;பராமரிப்புத் திணைக்களம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மாவட்ட சிறுவர் மேம்பாட்டு பிரிவு ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்குப்பற்றியிருந்தனர்

குறிப்பாக இக்கலந்துரையாடலில் பாடசாலைகளில் ஒழுக்கத்திற்கு மாறாக செயற்படுகின்ற அல்லது தவறிழைக்கின்ற மாணவர்களுக்கு தண்டணையின் ஒரு பகுதியாக விடுகைப் பத்திரத்தை வழங்குவதை பாடசாலை அதிபர்கள் தொடர்ச்சியாகப் பின்பற்றி வருவதால் அவ்வாறு விடுகைப் பத்திரத்தை வழங்கி பாடசாலையிலிருந்து வெளியேற்றப்படும் மாணவர்கள் சமூகத்தில் பல்வேறு குற்றச் செயல்களைப் புரியும் நபர்களாக இனங்காணப்படுகின்றனர் என்பது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.

மேலும் தவறிழைத்த மாணவர் தொடர்பில் பாடசாலை ஒழுக்காற்றுக் குழுவினைக் கூட்டி பாடசாலையிலிருந்து இடைவிலகாத வகையில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமே தவிர மாணவர்களுக்கு விடுகைப்பத்திரம் வழங்கும் அதிகாரம் கல்வியமைச்சின் 2016ஃ 12 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் பிரகாரம் அதிபர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே அதிபர்கள் ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பெயரில் மாணவர்களுக்கு விடுகைப்பத்திரத்தை வழங்குவதானது அதிபர்கள் தமக்கு கையளிக்கப்படாத அதிகாரத்தை செயற்படுத்துவதாகும் எனவும் எனவே இது அதிகார வரம்புமீறல் எனவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் குறித்த சுற்றுநிருபத்தின் படி ஒரு மாணவன் தொடர்பில் அவ் ஒழுக்க மீறலுக்குட்பட்ட மாணவனை அப்பாடசாலையில் தொடர்ந்து வைத்திருப்பதா அல்லது இன்னொரு பாடசாலைக்கு குறித்த மாணவனை இணைப்பதா என்ற தீர்மானத்தை மேற்கொள்வது வலயக் கல்விப்பணிப்பாளருடைய கடமை  மற்றும் பொறுப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே வலயக் கல்விப்பணிப்பாளர் இவ் விடயத்தில் கரிசனையோடு செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இக் கலந்துரையாடலின் இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. பாடசாலை மாணவர்களுக்கு ஒழுக்காற்றுக் கட்டளையின் ஒரு பகுதியாக அதிபர்களால் விடுகைப் பத்திரத்தை வழங்குவது மேற்கொள்ளாதிருக்க அதிபர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கல்.

2. மாணவர்களை அப்பாடசாலை சூழலில் வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது எனின் அவ்விடயம் வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கு அதிபர்களால் கொண்டுவரப்படுதல் வேண்டும். எச் சந்தர்ப்பத்திலும் மாணவரது கல்வி உரிமையை பறிக்கும் வகையில் மாணவர்களுக்கு அதிபர்களால் விடுகைப்பத்திரம் தன்னிச்சையாக வழங்கப்பட முடியாது எனத் தீர்மானிக்கப்பட்டது.

3. மாணவர்கள் பாடசாலைகளில் தவறிழைக்கும் சந்தர்ப்பத்தில் மாணவர்களுக்கு விடுகைப்பத்திரம் வழங்கும் போது “பெற்றோரின் சம்மதத்துடன் வழங்கப்பட்டது” என அதிபர்களால் பெற்றோரிடம் கடிதம் பெற்று வழங்கப்படும் சந்தர்ப்பங்களும் கலந்துரையாடப்பட்டது. எனினும் மாணவரின் ஃசிறுவர்களின் அதியுச்ச நலனைக் கருத்திற் கொண்டு பெற்றோரின் சம்மதத்தை விட மாணவனின் கல்விக்கு முக்கியத்துவம் கொடு;க்கும் வகையில் அதிபர்கள் செயற்பட வேண்டும். எனவும் இவ்வாறான சூழ்நிலைகளையும் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

4. பெற்றோர் சுயவிருப்பத்தின் பேரில் மாணவர்களது விடுகைப்பத்திரத்தைக் கோரினாலும் கூட, அம் மாணவன் வேறொரு பாடசாலையில் அனுமதியைப் பெற்றுள்ளமையை உறுதிப்படுத்திய பின்னரே அம்மாணவனது விடுகைப்பத்திரம் வழங்குவது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும என தீர்மானிக்கப்பட்டது.

5. மாதம் தோறும் வலயக் கல்விப்பணிப்பாளர்கள் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் பகுப்பாய்வு செய்ய வேண்டும். மாணவர்களுடைய எண்ணிக்கையில் குறைவு காணப்படும் பொழுது அவ்விடயம் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு ஒரு மாணவன் பாடசாலையை விட்டு விலகியிருக்கும் போது அம் மாணவன் தொடர்பில் ஆராயவும் வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் பாடசாலைக்கு வரவு ஒழுங்கீனாமாக உள்ள மாணவர்கள் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

6. ஒழுக்கத்திற்கு மாறாக செயற்படுகின்ற மாணவர்கள் தொடர்பில் மட்டுமன்றி, சவாலிற்கு உட்பட்ட சிறுவர்கள், கல்வி குறைவான சிறுவர்கள், துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பிலும் அதிபர்கள் பாடசாலை விடுகைப்பத்திரம் வழங்குவதில் தன்னிச்சையாக செய்பட முடியாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தந்தையால் படுகொலை செய்யப்பட்ட மூவருக்கும் ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட பிரதிநிதி இறுதி அஞ்சலி!
பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, இந்தியா அதிகளவில் எதிர்பார்க்கிறது ...
மற்றொரு கொரோனா அலை அச்சுறுத்தல் இல்லை - வீடுகளுக்கு சென்று செயலூக்கி தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை...