இக்கட்டான காலத்தில் யாழ். மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததை இன்று மேலும் வலுவடையச் செய்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் – வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன் சுட்டிக்காட்டு!

Thursday, August 19th, 2021

வடபகுதி மக்களின் பிரச்சினைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் தீர்வை காண்பதற்கு அங்கீகாரம் பெறும்வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்பிக்க கூடிய அந்தஸ்துள்ள ஒருவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே இருக்கின்றார்.

இதை அண்மையில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்கள் சீன மக்கள் குடியரசின் வெளிநாட்டு அமைச்சருக்கும் பகிரங்கமாக தனது அரசாங்கத்தின் வடக்கு கிழக்கு மக்களின் சார்பான பிரதிநிதி என்றும்  அறிவித்திருந்ததையும் நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

அந்தவகையில் யாழ் மாவட்டத்தில் எந்த துறைசார் திட்டத்தையும் யார் முன்னெடுத்ததாக பீற்றித்திருந்தாலும் அதை பெற்றுக்கொடுப்பதற்கான திறன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டுமே உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாகப் பொறுப்பாளர் ஐங்கரன் இராமநாதன்  தெரிவித்துள்ளார்.

 “சமுர்த்தி அருணலு” வேலைத்திட்டத்தின் கீழ். இன்றையதினம் சமுர்த்தி பயனாளிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகயைிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாடு யுத்தத்தால் அழிந்துகொண்டிருந்தபோது வறிய மக்களின் வயிற்றிலடித்து தமது வர்த்தக நிறுவனங்களை பலப்படுத்திக்கொண்டவர்கள் இன்று மக்களின் மீது கரிசனை காட்டுவது வேடிக்கையாகவுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அன்றுமுதல் இன்றுவரை மக்களின் நலனையே கொள்கையாகக் கொண்டு அதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்.

அந்தவகையில்தான் சமுர்த்தி திணைக்களத்தினூடாக கிடைக்கப்பெறுகின்ற நலன்களை வடபகுதி மக்களும் அனுபவிப்பதற்கான வழிவகையை அன்று செய்திருந்தது மட்டுமல்லாது அதன் தொடர்ச்சியாக இன்றையதினமும் கிடைக்க வழிசமைத்துக் கொடுத்துள்ளார்

ஆனால் வறிய மக்களின் நலன்களை மட்டுமே நோக்காகக் கொண்டு எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தபோதும் கூட ஓடி ஒழியாது பல தசாப்தங்களாக மக்களுடன் மக்களாக இருந்து சேவையாற்றுபவர்களுக்கும்  இன்று சிலர் பாடம் கற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றனர்.

இத்தகையவர்களுக்கு இந்த சமுர்த்தித் திட்டம் எமது யாழ் மாவட்டத்திற்கு எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது கூட தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது. ஆனால் இன்று தாங்கள் தான் அத்தனையையும் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதுபோல ஓடித்திருந்து மேடைகளில் தமக்கு அழைப்பு விடுக்கும்படி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து விளம்பரம் தேடித்திரிவதுடன் எம்மை நோக்கி சேறடிப்புகளையும் தமது ஊடகங்களில் செய்கின்றனர்.

தற்போது நாட்டின் அசாதாரண சூழல் நிலையிலும் மக்களுக்கான பல அபிவிருத்தி திட்டங்களை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உடனுக்குடன் பெற்றுத் தந்துகொண்டிருக்கின்றர். இதற்கு உதாரணமாக தடுப்பூசிகள் விடயத்தை கூறலாம்.

அதுமட்டுமல்லாது குறித்த நபர்களும் கடந்த நல்லாட்சியில் இருந்து மக்களை ஏமாற்றியதே தவிர வேறு எதனையும் செய்யவில்லை. ஆனால் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மக்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களை விரைவாகச் செய்துகொண்டிருக்கின்றார். ன்.

அன்றைய காலகட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த வேதனம் 2000 ரூபா. அவர்கள் மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் பொழுது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து அவர்களுக்கு சார்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்கிறார்கள். என சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மிரட்டப்பட்டது மட்டுமல்லாது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் தமது உயிர்களை துச்சமாக நினைத்து. அதையும் தாண்டி அவர்கள் மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்றார்கள்.

அதுமட்டுமல்லாது தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்கம் காலகட்டத்தில் கூட மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இன்றும் கூட அவர்கள் தங்களது உயிர்களை தியாகம் செய்கின்றார்கள்.

அந்தவகையில் சமுர்த்தி திட்டத்தின் ஊடாக மக்களுடைய வாழ்வாதாரத்தை மேலும் சிறப்பானதாக முன்னெடுப்பதற்கு பல யோசனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருகின்றார். அதன் ஒரு அங்கமாகவே இந்த உதவித் திட்டமும் அமைகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: