தாமதமான சாரதி அனுமதி அட்டைகளை தனியார் மூலம் அச்சிட தீர்மானம் – மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, June 15th, 2023

தனியார் துறை மூலம் மொத்தம் 800,000 சாரதி அனுமதி அட்டைகளை அச்சிட மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது தமது திணைக்களத்தின் வசம் உள்ள அச்சிடும் இயந்திரங்களின் உற்பத்தித் திறன் போதுமானதாக இல்லை. புதிய அச்சு இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு 200 மில்லியன் ரூபா செலவாகும்.

இந்தநிலையில், இந்த சாரதி அனுமதி அட்டைகளை அச்சிடுவதில் பல மாதங்களாக தாமதம் ஏற்பட்டுள்ளதால் அவற்றை தனியார் மூலம் அச்சிட தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமது திணைக்களத்தின் கீழுள்ள இயந்திரத்தால், ஒரு சாரதி அனுமதி அட்டையை அச்சிடுவதற்கு 150 ரூபா செலவிடப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: