சோளப்பயிர்ச் செய்கையில் படைப் புளுக்கள் தாக்கம் – விவசாயிகள் கவலை!

Saturday, December 19th, 2020

சோளப்பயிர்ச் செய்கையையினை என்றுமில்லாதவாறு படைப் புளுக்கள் ஆக்கிரமித்து வருவதால் பயிர்ச்செய்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மழையினை நம்பி விளைவிக்கப்படும் பெரும்போக பயிர்ச் செய்கையை பல விவசாயிகள் முன்னெடுத்துவரும் இந்நிலையில் குறித்த புளுக்களின் தாக்குதலால் பரவலான பயிர்ச் செய்கைகள் முற்றாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

விவசாய திணைக்களத்தினரது அறிவுருத்தலுக்கு அமைவாக விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்தபோதிலும் அது பயனளிக்காத காரணத்தால் தாம் நிர்க்கதியாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து திருகோணமலை பிரதி விவசாயப்பணிப்பாளர் தலைமையில் குறித்த பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு வருகைதந்து சேத விபரங்கள் குறித்து ஆராய்ந்துகொண்டார்.

குறித்த விடயம் தொடர்பாக கறுத்தது தெரிவித்த அவர், பரவலான விவசாயிகள் தமது அறுவுருத்தலுக்கு அமைவாக இரசாயனங்களை பயன்படுத்துகின்றர்.

குறித்த இரசாயனத்தினை இரு முறை பயன்படுத்துமாறு அறிவுருத்தியிருந்த போதிலும் அதன் விலை அதிகம் என்பதால் பரவலான விவசாயிகளால் அதனை இருமுறை பயன்படுத்த முடியாதிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக குறித்த படைப்புளுக்கள் அழிவடையாது பாரிய சேதங்களை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். விவசாயிகாளுக்கு இது தொடர்பிலான தொடர்ச்சியான பயிற்சி வகுப்புகளை வழங்கவும் நடமாடும் விரிவாக்க சேவைகளை நடாத்ததாம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் விவசாயிகளது காப்புறுதி திட்டங்களை விரிவுபடுத்தவும் அது தொடர்பிலான விழிப்புனர்வுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

Related posts: