தாய்நாட்டிற்காக சேவையாற்றியவர்களை கௌரவிக்கும் தேசிய விருது விழா!

Tuesday, March 21st, 2017

தாய்நாட்டிற்காக தமது விசேட பங்களிப்பை வழங்கிய 90 பேருக்கு விருது வழங்கும் தேசிய விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்த இலங்கையர்களை பாராட்டும் நோக்கில் இந்த விருது விழா நடைபெறுகிறது. 12 வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ளது ஸ்ரீலங்காபிமானிய விருது’ இவர்களுக்கு வழங்கப்படும்.

இது நாட்டின் உயர் விருதுகளில் ஒன்றாகும். நாட்டிற்காக மிகச் சிறந்த புகழ்மிக்க சேவையை வழங்கியமைக்காக ஒருவருக்கு மாத்திரம் இந்த விருது வழங்கப்படும்.

இது தவிர 10 பேருக்கு தேசமான்ய விருதுகளும் 9 பேருக்கு தேசபந்து விருதும் 11 பேருக்கு வித்யாஜோதி விருதும் வழங்கப்படும். 2 பேருக்கு ஸ்ரீலங்கா ரஞ்ஜன விருதும், 22 பேருக்கு கலா கீர்த்தி விருதும், 7 பேருக்கு ஸ்ரீலங்கா சிகாமணி விருதும், 10 பேருக்கு வித்தியாநிதி விருதும், 14 பேருக்கு கலாசூரி விருதும், 2 பேருக்கு ஸ்ரீலங்கா திலக விருதும் 2 பேருக்கு வீர பிரதாப விருதும் வழங்கப்பட்டது.

Related posts:

ஆயிரம் ரூபா வழங்காத பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு - தொழில் அமைச்சர் நிமல் சிறிபா...
லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவில்லை - லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அறிவிப்...
நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிக்கும் வரை மின்வெட்டு தொடரும் – தொடர்ந்து இரு தினங்களுக்கு 200 ...