செப்டெம்பருக்கு முன்னர் தேர்தல் – முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த வெளியிட்டுள்ள தகவல்!

ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் ஒன்று செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என நம்புவதாக முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களினால் வாக்கெடுப்பு நடத்தப்படாமை ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு பாரிய பிரச்சினையாகும் எனவும் தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் இருந்து ஒரு தேர்தலையாவது நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையில் கெரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,402 ஆக உயர்வு!
நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம் - சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவிப்பு!
இந்திய நிதி அமைச்சர் - இலங்கை உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு - கடன் மறுசீரமைப்பிற்கான உத்தரவாதத்தை வழ...
|
|