நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம் – சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவிப்பு!

Friday, July 23rd, 2021

நாட்டின் 19 மாவட்டங்களில் நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு உட்பட்ட 325 களஞ்சியங்களில் நெற்கொள்வனவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

தேவைப்படும் பட்சத்தில் தனியார் துறையின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள சபை எதிர்பார்த்துள்ளது .

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 310 கோடி ரூபா கிடைத்துள்ளது என்றும் சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் வரலாற்றில் முதற் தடவையாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்களையும் ஓர் இடத்திற்கு கொண்டு வர விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுக்களால் முடிந்திருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் கூறினார்.

சந்தையில் அனைத்து அரிசி வகைகளையும் 100 ரூபாவுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


காசோலை மோசடி முறைப்பாடுகளுக்கு உடனடி நடவடிக்கை - யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அறிவிப்பு!
ஸ்மார்ட் திறனுடன் கூடிய பிள்ளைகளை நாட்டுக்கு வழங்கும் நடவடிக்கை - இரண்டு வருடங்களில் பாடசாலைக்கல்வி...
இலங்கையர்களில் 49 இலட்சம் பேருக்கு உணவு உதவி தேவைப்படுகிறது - ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதி...