எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் யாழ்ப்பாணம் – காரைக்கால் கப்பல் சேவைக்கு அனுமதி!
Saturday, June 3rd, 2023
தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கு இலங்கையின் ஹேலீஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் இந்த சேவையை நடத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் – கே.கே.எஸ். இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது.
இதன்போது இந்தியத் தரப்பிலிருந்தே அதற்கான அனுமதிகள் இன்னமும் கிடைக்கவில்லையென அறியமுடிகின்றது.
இதேவேளை, பாண்டிச்சேரியிலிருந்து காங்கேசன்துறைக்கான சரக்குக் கப்பல் சேவையை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடத்துவதற்கான அனுமதி ஹேலீஸ் நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கோர விபத்து: இரு சகோதரர்கள் உட்பட மூவர் பலி!
ஜனாதிபதி விசேட செயலணி தனது பணிகளை 24 மணி நேரமும் முன்னெடுப்பு!
அமைச்சர் டக்ளஸ் நிதி ஒதுக்கீடு – வலி தெற்கு பகுதி விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு!
|
|
|


