சுற்றுலா வலயங்களில் 5 உள்நாட்டு விமான நிலையங்கள் அபிவிருத்தி – சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கை!

Sunday, July 25th, 2021

சுற்றுலா வலயங்களை மையப்படுத்தி, ஐந்து உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வது குறித்து, சுற்றுலாத்துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

கொவிட்-19 பரவலின் பின்னர், நாட்டில் சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும்போது, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கும், புதிய உபாயமாக இந்த நடவடிக்கை செயற்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, சீகிரியா, கொக்கலை, அம்பாறை, அநுராதபுரம் மற்றும் கிராந்துருகோட்டை முதலான பிரதேசங்களை மையப்படுத்தி, உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை - வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்...
நிதி அமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்க வாய்ப்பு - மத்திய...
ஜனாதிபதி ரணில் - சீன துணைப் பிரதமர் சந்திப்பு - சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக...