வெளியானது 16 அத்தியாவசியப் பொருட்களின் நிர்ணய விலைகள்!

Thursday, July 14th, 2016

கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தியவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் குறித்த பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

16 அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாடு விலைகளை அமைச்சில் இடம்பெற்ற அருங்கலைகள் பேரவையின்  நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அமைச்சர்  தெரிவித்திருந்தார்.

இந்தப் பொருட்களுக்கான விலைகள் இன்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டு உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தகரத்தில் அடைக்கப்பட்ட டின் மீன் (480g) 140 ரூபாவுக்கும், (105g) 70 ரூபாவுக்கும் கடந்த காலத்தில் இருந்தது போன்றே பழைய விலைக்கு வழங்கப்படும்.

பாசிப்பயறு கடந்த காலங்களை விட 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்தக் கட்டுப்பாட்டு விலைக்கு மாற்றமாக எவராவது செயற்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் நாடெங்கும் இவற்றைக் கண்காணிக்க குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தியாவசியப் பொருட்களின் விபரங்கள் வருமாறு.

கோழி இறைச்சி (தோலுடன்) 410 ரூபா

கோழி இறைச்சி (தோல் இன்றி) 495 ரூபா

சிவப்பு பருப்பு – 169 ரூபா

சீனி ஒரு கிலோகிராம் – 95 ரூபா

நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோகிராம் – 495 ரூபா

நெத்தலி (டுபாய்) ஒரு கிலோகிராம் – 410 ரூபா

கடலை ஒரு கிலோகிராம் – 260 ரூபா

பயறு 1 கிலோகிராம் – 220 ரூபா

டின் மீன் – 140 ரூபா

இறக்குமதி செய்யப்பட்ட முழு ஆடைப்பால் மா – 810 ரூபா

உள்நாட்டு முழு ஆடைப்பால் மா – 735 ரூபா

கோதுமை மா ஒரு கிலோகிராம் – 87 ரூபா

உருளைக்கிழங்கு (உள்நாடு) 1 கிலோகிராம் – 120 ரூபா

பெரிய வெங்காயம் 1 கிலோகிராம் – 78 ரூபா

காய்ந்த மிளகாய் 1 கிலோகிராம் – 385 ரூபா

கருவாடு (கட்டா) 1 கிலோகிராம் – 1100 ரூபா

கருவாடு (சால) 1 கிலோகிராம் – 425 ரூபா

மாசி 1 கிலோகிராம் – 1500 ரூபா

சஸ்டஜன் பால்மா – 1500 ரூபா

Related posts: