டெங்கு நோயை கட்டுப்படுத்த பொதுச் சுகாதார பிரிவினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் கோரிக்கை!

Saturday, August 29th, 2020

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்த பொதுச் சுகாதார பிரிவினருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா கோரியுள்ளார்.

யாழ். குடாநாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்தும் கருத்து தெரிவித்த அவர் –

யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மைய நாட்களில் 7 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் மூவாயிரத்து 690 பேர் டெங்கு நோய்த் தொற்றுக்குள்ளாகி இருந்தார்கள்.

இவ் வருடத்தில் இன்றையதினம்வரை 900 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுருக்கிறார்கள்.

இனிவரும் காலங்களில் மழைகாலம் ஆரம்பிக்கவுள்ளதால் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகமாக காணப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக டெங்கு நோய்த் தாக்கம் அதிகளவில் யாழ்ப்பாணத்தில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளும் அதிகம் உள்ளது.

யாழ். குடாநாட்டில் மழைநீர் தேங்கும் இடங்களில் டெங்கு தொற்றினை ஏற்படுத்தக்கூடிய நுளம்பு பெருகும் அபாயம் காணப்படுகின்றது.

நீர் தேங்கும் இடங்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், வெற்று ரின்கள், இளநீர் கோம்பைகள் மற்றும் திண்மக் கழிவுகளில் இந்த நுளம்புகள் பெருகக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை மீண்டும் மிகவும் உக்கிரமாக செய்தல் அவசியம்.

இதேவேளை யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு சிகிச்சைக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

கவர்ச்சியான வாக்குறுதிகளை வழங்கும் தமிழ் அரசியல்வாதிகளால் மக்கள் தொடர்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர...
விவசாயிகளுக்கு நிவாரண நிதியாக தலா 30,000 ரூபா - குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் உதவி - வ...
தனிப்பட்ட பகை - யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு தாக்குதல் - தாயும் மகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிக...