சுற்றுலாத்துறை சார்ந்தோருக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவிப்பு!

உள்நாட்டு சுற்றுலாத்துறை சார்ந்தோருக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த துறையில் கொவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்படும் எனவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. திட்டத்திற்கு 30 கோடி ரூபா வரையிலான தொகை செலவிடப்படும் என்றுமு; அவ்வதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
அதிகாரசபையில் தம்மைப் பதிவு செய்து கொண்ட சுற்றுலா வழிகாட்டிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும். சாரதிமாருக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்..
கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை ஹோட்டல் பணியாளர்களுக்கு மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா என்ற ரீதியில் ஆறு மாத கால கடன் வசதிகள் வழங்கப்படவுள்ளன. சுகாதார விதிமுறைகளை அனுசரித்து நாளாந்தம் சுமார் 300 சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க திட்டமிடப்படுகிறது என செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|