பால் உற்பத்தியை அதிகரிக்க  பசு மாடுகள் கொள்வனவு!

Saturday, June 25th, 2016

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் 8000 பசு மாடுகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தயாராக இருப்பதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

நவோதய வேலைத்திட்டத்தின் கீழ் வட மத்திய மாகாண பிரதேசங்களில் உள்ள தேசிய கால்நடை சபை பண்ணைகள் ஊடாக குறித்த பசு மாடுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பால் உற்பத்திப் பொருட்களை தேசிய கால்நடை சபை சந்தையின் மூலம் மக்கள் இலகுவாக பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கால்நடை

சபையின் சந்தைகளை நவீனபடுத்தவுள்ளதாகவும் அமைச்சர் ஹெரிசன் தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் குறித்த சபைகளுக்கான விஜயத்தை தான் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த கால ஆட்சியை விட தற்போதைய அரசாங்கம் விவசாயிகளுக்காக ஒரு லீற்றர் பாலின் விலையை 70 ரூபாவுக்கு பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: