நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடைகள் ஏற்படுத்தக்கூடாது – பிரதமர்!

Sunday, December 4th, 2016
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவித தடையுமின்றி நாடாளுமன்றத்திற்கு வருவதற்கும், அங்கிருந்து செல்வதற்குமான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தி;ற்கு வரும் பாதையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபைக்கு வருவதற்கு தடைகள் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதனால் இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சபாநாயகரிடம் தெளிவுபடுத்தப்பட்டதாகவும் பிரதமர் நேற்று பாராளுமன்றத்தில்  தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்காக நேற்று வருகை வந்த பொதுமக்களுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன முன்வைத்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

எத்தகையை தடையும் ஏற்படுத்தப்படவில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய இதன்போது தெரிவித்;தார். அனுபவமிக்க சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் உண்மைக்குப் புறம்பான விடயங்கள் தொடர்பில் கவலையடைவதாகவும் சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

ஏதேனும் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் இதனால் பொதுமக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் தடைகள் ஏற்படாத வகையில் அதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதேபோன்று பாதுகாப்பு வலயத்தை இவ்வாறானவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த பிரதமர் இரத்துபஸ்வலவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். பொலிஸ்மா அதிபருக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை. சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாப்பதில் பொலிஸ்மா அதிபருக்கும் பொலிஸாருக்கும் பொறுப்பு உண்டு. இதற்கு தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். ஊழல், மோசடிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகள் நிறுத்தப்படவில்லை என்றும் பிரதமர் கூறினார்

1440133302-1774-1

Related posts: