அனைத்து வாகனங்களுக்கும் புதிய நடைமுறை – நிதி அமைச்சு!
Friday, January 18th, 2019
2019முதல் அமுலுக்கு வரும் வகையில் கொண்டு வரப்பட்ட காபன் வரி அனைத்து வாகனங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் வாகன வருமான அனுமதிப் பத்திரமானது புதுப்பிக்கப்படும் போது இந்த வரி அறவிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வாகனம் பதிவு செய்யும் ஆண்டில் இந்த வரியை செலுத்த வேண்டியது இல்லை எனவும் தெரியவருகிறது. இந்த விடயத்தை நிதி அமைச்சு தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரச வாகனங்கள் இந்த காபன் வரியை செலுத்த வேண்டியதில்லை என செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே மேற்படி விடயத்தை நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
கொதலாவலபுர சமாதி பௌத்த மையத்தின் தங்க வேலியுடனான போதி சுவர் பிரதமரினால் திறந்துவைப்பு!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் உரிமை நிறுவனத்திடம் முன் தொகையாக 40 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கோரிய இலங்கை...
|
|
|


