உலக பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிப்பு!

Wednesday, April 18th, 2018

இந்த ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி வேகம் 3.9 சதவீதமாக இருக்குமென்று சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியுள்ளது.

இது 2011ஆம் ஆண்டின் பின்னர், பதிவாகக்கூடிய கூடுதலான வளர்ச்சி வேகமாகும். இதற்கு சந்தை வாய்ப்பு மற்றும் சாதகமான மனோபாவம் என்பன காரணமாகும் என்று நிதியம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் வர்த்தக ரீதியில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டுக்கு மத்தியிலும் உலக பொருளாதாரம் வளர்ச்சி காணுமெனசர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: