கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் நியமன முறைகேட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி ஆதரவு!

Monday, March 6th, 2017

வடக்கு மாகாணசபையால் கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் பாடசாலை சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் நியாயபூர்வமான அறவழிப் போராட்டத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தமது ஆதரவை வழங்கியுள்ளது.

குறித்த பாடசாலைக்கு அண்மையில் அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ப.கணேசன் என்பவரை தொடர்ந்தும் தமது பாடசாலையின் அதிபராக செயற்படுவதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இன்றையதினம் பாடசாலை முன்றலில் பாடசாலை சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் ஆகியோர் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

1

குறித்த பாடசாலையில் கடமையாற்றி வந்த முன்னாள் அதிபர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளரால் பாடசாலைக்குரிய அதிபர் பதவிக்குரிய  வெற்றிடத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றுகின்ற அதிபர் சேவை வகுப்பு 1 மற்றும் 2 ஐச் சேர்ந்த அதிபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டமைக்கு இணங்க குறித்த பாடசாலைக்குரிய தகுதி அடிப்படையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சால் கடந்த மாதம் 23ஆம் திகதி புதிய அதிபராக ப.கணேசன் நியமிக்கப்பட்டிருந்தார்.

2

இந்த நிலையில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர், கடமையில் உள்ள அதிபரை மாற்ற வேண்டும் எனக்கூறி அவரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவும்பாடசாலை அதிபராக ஒருவரை நியமித்துவிட்டு குறுகிய காலத்திற்குள்ளே எந்தக் காரணமும் இல்லாமல் அவரை நீக்க நினைப்பது தமது கல்லூரி மீது களங்கம் ஏற்படுத்தும் சம்பவமாக  அமையும் என்றும் அதிபர் தரம் 1 இல் இல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டுளளார் எனக் கூறுபவர்கள் அதிபர்களின் தரங்களை மட்டும் கவனத்தில் எடுக்காது, அவர்களின் ஆளுமையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.எனவும் கோசமிட்டதுடன் பாடசாலைச் சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறித்த அதிபரை ஏன் வடக்கு மாகாணசபை குழப்பங்களை ஏற்படுத்தி கல்விச் சமூகத்தின் விருப்பத்திற்கு மாறாக மாற்றம் செய்ய முனைகின்றது எனவும் கேள்வி எழுப்பியதுடன்.

வடக்கு மாகாணசபை தமது கல்லூரி அதிபர் மாற்றத்தை நிறுத்த வேண்டும் என்று அவ்வாறு நிறுத்தாதுவிடின் காலவறையற்ற போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Related posts: