சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சமன் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிவு!.
Saturday, May 18th, 2024
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சமன் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சமன் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுக் கொள்கை மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்யசோதி சரவணமுத்துவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்பாக அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2000 ஆம் ஆண்டில், யாழ்.மிரிசுவில் பகுதியில் 5 வயது குழந்தை உட்பட 08 பொதுமக்களை வெட்டிக் கொன்ற சம்பவத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது,
குறித்த சம்பவம் 2000 ஆம் ஆண்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


