நாட்டு நிலைமைகள் குறித்து பிரதமரின் விசேட உரை இன்று!

Tuesday, April 7th, 2020

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட அறிக்கையானது இன்று இரவு 7.45 மணிக்கு அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலமை, நெருக்கடியை தணிப்பதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை உள்ளிட்ட விடயங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறும் என கூறப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் தற்போது வரையில் சுமார் 183 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்கியுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கொரோனா வைரஸை தொடர்ந்து வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தீவிர அவதானத்தில் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் உரிய முறைக்கமைய அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்ட பின்னர் அதற்காக நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலிய MSC கப்பலில் சிக்கியிருந்த இலங்கை இளைஞன் விடுத்த கோரிக்கைக்கமைய அவரை மீட்க கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டதாக பிரதமர் கூறியுள்ளார்.

சமகால நெருக்கடி நிலையில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப எதிர்பார்த்தால் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்த பின்னர், சர்வதேச பாதுகாப்பு முறைக்கமைய அவர்களை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை விரைவில் - காணி அமைச்சின் செயலாளர...
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இன்றுமுதல் புதிய வரி விதிப்பு அறிமுகம் - 140 பில்லிய...
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும...