மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தைப் பெறுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்!

Saturday, September 30th, 2023

இலங்கை மின்சார சபையினால் இவ்வாண்டிற்காக முன்மொழியப்பட்ட மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தைப் பெறுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தின் பிரிவு 30க்கு இணங்க, விநியோக உரிமதாரரால் (இலங்கை மின்சாரம்) முன்மொழியப்பட்ட 2023ஆம் ஆண்டிற்கான மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவது தொடர்பாக பொதுக் கருத்தை (பங்குதாரர்களின் ஆலோசனை) பெற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக பயன்பாட்டு ஒழுங்குமுறை அதிகாரியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான உத்தேச 3வது மின் கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் எழுத்துப்பூர்வ கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

இது தொடர்பான வாய்வழி பங்குதாரர்களின் ஆலோசனை ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதியன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ளது.

வாய்வழி பங்குதாரர் ஆலோசனையில் பங்கேற்க முன் பதிவு செய்ய 071 862 2800 என்ற எண் மூலம் தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: