பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி அவசியம் – இராஜாங்க அமைச்சர் முன்மொழிவு!
Saturday, June 10th, 2023
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்மொழிந்துள்ளார்;
இன்றைய சிறுவர்களுக்கு பாலியல் பற்றிய உண்மையான தகவல்கள் தெரியாது என்பதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு சிறுவர்கள் ஆளாகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
சில பாடசாலை மாணவர்களுக்கு சமூக நோய் என்றால் என்ன என்று தெரியாது. என்றும் சில சிறுவர்கள் இந்த நோய்களைப் பற்றி அறியாததால் அவர்களும் பாதிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இந்தோனேஷிய ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய பேச்சு!
டெனீஸ்வரன் பதவி நீக்கப்படுவார் - சிவாஜிலிங்கம்!
கடந்த ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டிருந்த நகர அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு துறைசார் அதிகா...
|
|
|


