சுங்க பணியாளர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்றும் தொடர்கிறது!

சுங்கப் பணியாளர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க போராட்டம் இன்று(01) மூன்றாவது நாளாகவும் தொடரவுள்ளதாக சுங்க ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தங்களது பிரச்சினைக்கு நிதி அமைச்சு உரிய தலையீட்டை மேற்கொள்ளாமையே, தொடர் போராட்டத்திற்கான காரணம் என சுங்க அதிகாரிகள் சங்க தலைவர் உதித்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சுங்க பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய பீ.எஸ்.எம் சார்ள்சை அந்த பதவியிலிருந்து நீக்கி அதற்கு பதிலாக கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை நியமித்தமைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கம், சுங்க அதிகாரிகள் சங்கம், சுங்க உத்தியோகத்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
மாகாணசபைகளில் பிரிவினைவாதம் பேசத்தடை - பிரதமர்!
சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
வடக்கு – கிழக்குப் பெண்களை இலக்கு வைத்து மனித வியாபாரம்- அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ!
|
|