மாகாணசபைகளில் பிரிவினைவாதம் பேசத்தடை – பிரதமர்!
Tuesday, February 28th, 2017
மாகாணசபைகளில் பிரிவினைவாதம் பேசுவதற்கு தடை விதிக்கப்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
நாட்டின் எந்தவொரு மாகாணசபையிலும் பிரிவினைவாதம் பற்றி பேசுவதற்கு இடமளிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பில் இது தொடர்பிலான ஓர் விசேட சரத்தினை உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபையில் பிரிவினைவாதம் பேசப்படுவதாக தெற்கு அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் - நொக்ஸ் தாமெஸ் சந்திப்பு!
கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்!
அவசரகால சட்ட விதிமுறைகள் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!
|
|
|


