குற்றங்களைக் கட்டுப்படுத்த மறைகாணி பொருத்துங்கள் – பொலிஸார் கோரிக்கை!
Wednesday, October 10th, 2018
நல்லூர் பிரதேச சபையின் பிரதான மூன்று வீதிகளில் மறைகாணி (சிசிரிவி) பொருத்தித்தருமாறு கோப்பாய் பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
நல்லூர்ப் பிரதேச சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் கோப்பாய் பொலிஸாருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மூன்று இடங்களில் மறைகாணி (சிசிரிவி) பொருத்தப்படவேண்டும் என்று பொலிஸார் கூறியுள்ளனர். திருநெல்வேலிச் சந்தி, கொக்குவில் தொடருந்து நிலையப் பகுதி, இராமசாமிப் பெரியார் சந்தி ஆகிய இடங்களில் உடனடியாக மறைகாணி பொருத்தப்பட வேண்டுமென்று பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படுகின்றது. அத்துடன் இந்தப் பகுதிகளில் இடம்பெறும் சமூக விரோதச் செயல்கள், குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் கோரிக்கையை நல்லூர்ப் பிரதேச சபை ஏற்றுக்கொண்டுள்ளது. சபையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கு பொலிஸாருக்கு பிரதேச சபை உதவி செய்யும் என்று சபை தெரிவித்துள்ளது..
Related posts:
|
|
|


