சீரற்ற காலநிலை – உயிரிழந்தவர்களின் குடும்பங்பளுக்கு பிரதமர் இரங்கல் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் துறைசார் தரப்பினருக்கு பணிப்பு!

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை குறித்து கவனம் செலுத்திய பிரதமர் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் மேலும் கூறுகையில் –
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக எமது நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதேவேளை, அந்நடவடிக்கைக்கு உங்களது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம்.
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் ஆழந்த அனுதாபங்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சீரற்ற காலநிலை குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பிலும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களினால் சபையில் அறிக்கையொன்று முன்வைக்கப்படவுள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|