நல்லூர் திருவிழாவில் அன்னதானம், தாக சாந்தி, நேர்த்திக் கடன், வியாபாரங்களுக்குத் தடை!

Tuesday, July 21st, 2020

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழாவிற்கு 300 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அங்கப்பிரதிஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையில் நடந்த விசேட அமர்வில் பொது சுகாதார பரிசோதகர்களாலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நல்லூர் திருவிழாவில் 500இற்கும் அதிகமான பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

இருப்பினும் சுகாதாரத் துறையினரால் பிரதமரின் அறிவிப்பு தொடர்பாக பொது சுகாதார பரிசோதர்களுக்கு உத்தியோகபூர்வமாக எந்த அறிவுறுத்தலும் விடுக்கப்படவில்லை.

இதனால், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன்படி திருவிழாவில் 300 பக்தர்களையே அனுமதிக்க முடியும். அன்னதானம், வியாபார நிலையங்கள், தண்ணீர் பந்தல்கள் போன்றவையும் இம்முறை தடைசெய்யப்படுகிறது” என்றும் தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: