சிறைக் கைதிகளை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவது நிறுத்தம் – சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவிப்பு!
Tuesday, July 14th, 2020
சிறைக் கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அச்ச நிலைமை உருவாகியுள்ளதன் காரணமாக நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விளக்கமறியல் கைதிகளுக்கான அடுத்த வழக்கு திகதியை தீர்மானித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் காணொளி தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையை தீர்...
காலநிலை மாற்றத்துக்கு முகங்கொடுக்க இலங்கை எடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு ஐநா ஒத்துழைக்கும் - ஐக்கிய...
ஒவ்வொரு மூன்று மணித்தியாலங்களுக்கும் நால்வர் விபத்துக்கள் காரணமாக மரணிக்கின்றனர் - சுகாதார அமைச்சு எ...
|
|
|


