ஒவ்வொரு மூன்று மணித்தியாலங்களுக்கும் நால்வர் விபத்துக்கள் காரணமாக மரணிக்கின்றனர் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Wednesday, July 5th, 2023

ஒவ்வொரு மூன்று மணித்தியாலங்களுக்கும் நால்வர் இயற்கை மரணமின்றி விபத்துக்கள் காரணமாக மரணிக்கின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய வருடத்திற்கு விபத்துக்களால் மாத்திரம் சுமார் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி வருடத்திற்கு விபத்துக்களால் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கின்றனர்.

மேலும் இலங்கையில் ஐவரில் ஒருவருக்கு வருடாந்தம் விபத்து ஏற்படுவதுடன், மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.

இதனால் அரசாங்கத்திற்கு பாரிய மருத்துவ செலவு ஏற்படுவதாகவும், விபத்துக்களை தவிர்த்துக்கொண்டால் பாரிய தொகையினை அரசாங்கம் சேமிக்கும் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் 15 வயது முதல் 44 வயதிற்கிடைப்பட்டவர்களே விபத்துக்களில் அதிகம் உயிரிழக்கின்றனர்.

இதனால் விபத்துக்களை குறைக்கும் வகையிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தேசிய விபத்துக்கள் தடுப்பு வாரம் கடந்த 03 ஆம் திகதி முதல் அமுல் படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: