ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையை தீர்மானிக்கும் – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Friday, October 1st, 2021

நாட்டில் இன்றையதினம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையை தீர்மானிக்கும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பாட்டால் மீண்டும் கொவிட் தொற்று அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஒரு மாதத்திற்கும் அதிக காலம் நாட்டை மூடி கொவிட் தொற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டோம். மக்கள் நிலைமையை புரிந்து கொண்டு அவதானமிக்க முறையில் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பரிந்துரைக்கு அமைய 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டமானது வடக்கு மாகாணத்தில் இருந்து ஆரம்பமான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

12 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட நீண்ட கால நோய் உடையோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பைசர் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும். வைத்தியர் ஒருவரின் சிபாரிசின் அடிப்படையில்  தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை

கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த நாள் பட்ட நோயுடைய மாதார்ந்த சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு இன்று (01)  முதல் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பைஷர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட தொற்றுநோய்யியலாளர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்பாக நேற்று(30 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் மாதாந்த சிகிச்சை,உளநலசிகிச்சைக்கு செல்லும் சிறுவர்கள் குறித்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் .

மாவட்டத்தில் குறித்த நாள்பட்ட நோயையுடைய பதிவு செய்யாத சிறுவர்கள் அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பெயர்களை பதிவு செய்து கொள்ள முடியும் பதிவு செய்து கொள்பவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் பின்னர் அறிவிக்கப்படும் என  தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் குறித்த சந்தர்ப்பத்தை தவறவிடாது பிள்ளைகளை அழைத்து வந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட தொற்றுநோய்யியலாளர் நிமால் அருமைநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: